மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்

சித்ராலயா கோபு இயக்கத்தில் முத்துராமன், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா நடிப்பில் கடந்த 1972-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘காசேதான் கடவுளடா’. தற்போது இப்படத்தை ரீமேக் செய்துள்ளனர். ஆர்.கண்ணன் இயக்கும் இப்படத்தில் சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். காசேதான் கடவுளடா படக்குழு இதில் யோகிபாபு, சிவாங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. […]

Continue Reading

பெண்கள் இலவசமாக பயணம் செய்ய பிங்க் நிற பேருந்துகள்- சென்னையில் இன்று முதல் இயக்கம்

தமிழகத்தில் சாதாரண கட்டணம் கொண்ட அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. சென்னையில் வெள்ளை நிற போர்டு கொண்ட பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும் அவசரத்தில் சில பெண்கள் இலவச பயணத்திற்காக டீலக்ஸ், சொகுசு பேருந்துகளில் ஏறி விடுகின்றனர். இந்த குழப்பத்தை தீர்க்கவும், இலவச பயணத்திற்கான பேருந்துகளை அடையாளம் காணவும் பிங்க் நிற பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள […]

Continue Reading

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்- தமிழக அரசு உத்தரவு

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 6 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயலாளராக ஜவஹர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழக (சிட்கோ) மேலாண் இயக்குநராக மதுமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளராக மணிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளராக மங்கத்ராம் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநராக ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

Continue Reading

ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் புதிய அப்டேட்

வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கும் அடுத்த படம் ‘டிரைவர் ஜமுனா’. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ‘ஆடுகளம்’, நரேன், ஸ்ரீ ரஞ்சனி, ‘ஸ்டான்ட் அப் காமடியன்’ அபிஷேக், ‘ராஜாராணி’ பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘டிரைவர் […]

Continue Reading

வந்தாச்சு புதிய முறை : வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறினால் இனி என்ன நடக்கும்?

போக்குவரத்து, சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு க்யூஆர் கோடு (QR Code) பொருந்திய பேடிஎம் (Paytm) கருவி மூலம் அபராதம் வசூலிக்கும் திட்டத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர்களுக்கு QR Code மற்றும் Paytm மூலம் வசூலிக்கும் அட்டைகளை மாநகர காவல் ஆணையர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாலை விதிகளையும், போக்குவரத்து விதிகளையும் மீறும் […]

Continue Reading

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி !

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை, டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடர்ச்சியாக கொட்டுகிறது. மேலும் மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் வரும் 7 ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக பருவ மழை மேலும் தீவிரமடைய […]

Continue Reading

பயிர் காப்பீடுக்கு ரூ.2,057 கோடி நிதி – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

பயிர்க் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த ரூ.2,057.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.   பயிர்க் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த ரூ.2,057.25 கோடி நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பயிர்காப்பீடு நிறுவனங்களுக்கு மாநில அரசின் பங்கு தொகையை ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.   அதன்படி, 2022-23-ஆம் நிதியாண்டில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையில் மாநில அரசின் பங்காக ரூ.2,057.25 கோடி நிதியை அனுமதித்து ஆணையிட்டுள்ளது. நடப்பாண்டில் எதிர்வரும் சிறப்பு […]

Continue Reading

பிரபல நடிகை மாலா பார்வதி தாயார் காலமானார்..!!

பிரபல நடிகை மாலா பார்வதியின் தாயார் கே லலிதா இன்று காலை காலமானார். நடிகை மாலா பார்வதி, மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தவர் இயக்குநர் ஏ.எல்.விஜய். அதைத் தொடர்ந்து பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி நடித்த நிமிர் படத்தில் பார்வதி நாயரின் அம்மாவாக நடித்திருந்தார் மாலா பார்வதி. அந்தப்படத்தில் இருவர் பெயரும் பார்வதி என்று இருந்ததால் […]

Continue Reading

விவசாயிகளுக்காக வாடகை டிராக்டர், கலப்பைகள்!

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (4.8.2022) தலைமைச் செயலகத்தில், வேளாண்மைப் பொறியியல் துறையால் 22 கோடியே 34 இலட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள 185 டிராக்டர்கள், 185 ரோட்டவேட்டர்கள் மற்றும் 185 கொத்து கலப்பைகள் ஆகியவற்றை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக குறைந்த வாடகையில் வழங்கிடும் அடையாளமாக, ரோட்டவேட்டர்கள் பொருத்தப்பட்ட 25 டிராக்டர்கள் மற்றும் கொத்துகலப்பைகள் பொருத்தப்பட்ட 25 டிராக்டர்கள் ஆகியவற்றை கொடியசைத்து தொடங்கி வைத்தார். வேளாண்மைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திடும் வகையில் […]

Continue Reading

விரைவில் ஆவின் தண்ணீர் பாட்டில்.. தமிழக அரசு அசத்தல்!!

தமிழகத்தில் விரைவில் ஆவின் தண்ணீர் பாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார் . கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு லிட்டர் ரூ.10க்கு அம்மா குடிநீர் பாட்டில் விற்கப்பட்டது. விலை குறைவு என்பதால் பொதுமக்கள் அதிகளவு பயன்படுத்தினர். பின்னர் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, இத்திட்டம் கைவிடப்பட்டது. இந்தநிலையில் ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்க திட்டமிட்டு இருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் பேசிய அவர் தமிழகத்தில் 28 இடங்களில் ஆவின் […]

Continue Reading