நாகர்கோவில் காசியின் ஃபோன், லேப்டாப்பில் இத்தனை ஆபாச வீடியோக்களா? – ஷாக்கான நீதிபதி!

1900 நிர்வாண படங்கள், 400 ஆபாச வீடியோக்கள் நாகர்கோவில் காசியின் மடிக்கணினி மற்றும் செல்போனில் இருந்ததாக சிபிசிஐடி குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது என நீதிபதி தெரிவித்திருக்கிறார். ஆசை வார்த்தைகளைக் கூறி சமூக வலைதளங்கள் மூலமாக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 120க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலிப்பதாக ஏமாற்றியதோடு, பணமோசடி மற்றும் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிய வழக்கில் நாகர்கோவிலை சேர்ந்த சுஜி என்ற காசி கடந்த 2020-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த […]

Continue Reading

அங்கன்வாடி மையங்களில் LKG,UKG சேர்க்கைக்கு ஆணை – தமிழக அரசு உத்தரவு!!

தமிழகத்தில் எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர் சேர்க்கை நடத்த தொடக்கக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 2381 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால் அதற்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்படாமலேயே இருந்தது. இதனால் பெற்றோர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் மூடப்படுவதாக ஜூன் மாதத் தொடக்கத்தில் தமிழக அரசின் தொடக்கக்கல்வித் துறை அறிவித்தது. […]

Continue Reading

மக்களை தேடி சென்று உதவும் நான் விளம்பர பிரியரா ? முதல்-அமைச்சர் ஆவேச பேச்சு..!!

ராணிப்பேட்டையில் ரூ.118 கோடியில் கட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட கட்டடங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. ரூ.22.19 கோடியில் 5 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.31.18 கோடியில் முடிந்த 23 திட்டப்பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.267 கோடியில் 71,103 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். பின்னர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- ராணிப்பேட்டை மாவட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க மாவட்டம் ஆகும். […]

Continue Reading

“தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டாம்” – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணியை உடனடியாக நிறுத்த பல்வேறு மாவட்டங்களில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு முடிவெடுத்தது. 2013 , 2014, 2017, 2019 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு நடத்திய இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில் தமிழ்நாட்டில் […]

Continue Reading

தாம்பரம் | பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளை

தாம்பரம் அருகே பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை சிசிடிவி காட்சிகள் பதிவான பெட்டியையும் திருடி சென்றுள்ளனர் சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலம் ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரா (38) செங்கல்பட்டு பொதுபணிதுறையில் கூடுதல் கோட்ட பொறியாளராக வேலை பார்த்து வருகிறார், சந்திரா கடந்த வெள்ளிகிழமை அன்று தனது குடும்பத்துடன் சொந்த ஊரான விருத்தாச்சலம் சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளார், அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்திருப்பதை […]

Continue Reading

இராஜகிரியில் நடைபெற்ற முப்பெரும் விழா..!!!

சிறந்த அதிகாரிக்கு உதாரணமாக திகழ்ந்து சிறப்பாக செயல்படுபவர் இராஜகிரி மன்னை சேர்ந்த ஷாகுல் ஹமீது. இராஜகிரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் மலேசியா மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன் நலதிட்டங்கள் வழங்கி, மலேசியா மனிதவள தலைமை செயல் அதிகாரியை பாராட்டினார். தஞ்சாவூர் அருகேயுள்ள இராஜகிரியில் இஸ்லாமிய நல சங்கம் சார்பில் மலேசியா அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன் பாராட்டு விழா, இராஜகிரி சமூக மேம்பாட்டு அறக்கட்டளை துவக்க விழா, நலதிட்டமும் மாணாக்கருக்கு ஊக்க பரிசும் வழங்கும் விழா […]

Continue Reading

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரிடம் தனிப்படை விசாரணை..!!!

கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-இல் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக,முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில்,கேரளாவைச் சேர்ந்த சயான்,வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்து இருந்தனர். இவர்கள் இப்போது ஜாமீனில் உள்ளனர்.அதே சமயம்,திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கொடநாடு வழக்கு தொடர்பாக கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் தனிப்படை போலீசார் நடத்தி வரும் மேல் விசாரணை தீவிரமடைந்தது. இந்த வழக்கில் விசாரணை நடத்தக் கோவை மேற்கு […]

Continue Reading

புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று முதல் 2 நாட்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து கார் மூலம் ஆம்பூர் வந்து தங்கினார். திருப்பத்தூரில் ரூ.110 கோடியில் கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலக திறப்பு விழா மற்றும் திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று […]

Continue Reading

OPS அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றி வருவதாக EPS தேர்தல் ஆணையத்தில் விளக்கம்!!

ஓ பன்னீர் செல்வம் அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றி வருவதாக எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவரை தேர்ந்தெடுத்தது, ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட உள்ளதாக அறிவித்தது குறித்து தேர்தல் ஆணையத்தில் ஓ பன்னீர் செல்வம் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் இந்த ஓபிஎஸ் புகார் அளித்ததற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் விளக்கம் அளித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பதில் மனுவில்,அதிமுக […]

Continue Reading

தனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை: அதிமுக முன்னாள் அமைச்சர் விளக்கம்..!

தனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என வைத்திலிங்கம் விளக்கம் அளித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. இதனால் கட்சி இரண்டாக உடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. இதயனிடையே தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அண்மையில் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அவர் தன்னை வீட்டில் […]

Continue Reading