இன்று இரவு 11 மணிக்குள் செய்திடுங்க.. தவறினால் இரு மடங்கு அபராதம்..!

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் நாளை (1-ம் தேதி) முதல் இரண்டு மடங்கு அபராதம் செலுத்த நேரிடும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இன்று (30-ம் தேதி) இரவு 11 மணிக்குள் இணைக்காதவர்களுக்கு இந்த அபராதம் செலுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் 12 இலக்க ஆதார் எண் > 10 இலக்க பான் எண் > ஆகியவற்றை டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் […]

Continue Reading

சூதாட்ட விடுதிகள், குதிரை பந்தயம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% வரி – ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு..!!

ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான ஹோட்டல் அறை வாடகைக்கு சரக்கு மாற்றும் சேவை வரி விதிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. ஜிஎஸ்டி அமைப்பின் இரண்டு நாள் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமனையில் சண்டிகரில் நேற்று தொடங்கியது. இதில் பல்வேறு பொருட்களின் வரி விகிதங்களை மாற்றியமைப்பதற்காக அமைக்கப்பட்ட மாநில நிதியமைச்சர்களின் குழு அளித்த பரிந்துரைகள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான ஹோட்டல் அறை வாடகை உள்ளிட்ட சில சேவைகளுக்கு […]

Continue Reading

#Cyclone Alert 60 கி.மீ வேகத்தில் சூறாவளி;வானிலை மையம் அறிவிப்பு!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,தமிழகத்தில் நீலகிரி,கோயம்புத்தூர்,திருப்பூர்,தேனி,திண்டுக்கல்,ஈரோடு,கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மேலும்,தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதைப்போல,நாளையும் தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,நீலகிரி,கோயம்புத்தூர்,திருப்பூர்,தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு […]

Continue Reading

கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் – சுகாதாரத்துறை கடிதம்

மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநில செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: பண்டிகை காலம் வருவதால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பெரிய திருவிழாக்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பொதுக்கூட்டங்கள் மற்றும் வழிபாட்டு கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் காற்றோட்ட வசதிகளை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Continue Reading

G7 சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு பிரதமர் மோடி இன்று ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு செல்கிறார்

ஜி-7 அமைப்பின் மாநாடு ஜெர்மனியில் உள்ள ஸ்கிளாஸ் எல்மாவ் நகரில் நடந்து வருகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி கலந்து கொண்டார். மாநாட்டில் பருவ நிலை, எரி சக்தி, சுகாதாரம் ஆகியவை தொடர்பான அமர்வில் மோடி பங்கேற்று பேசினார். இதற்கிடையே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ஆகியோரை சந்தித்து பேசினார். இதுகுறித்து மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, ஜி-7 மாநாட்டில் போரிஸ் ஜான்சன், […]

Continue Reading

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் புதுச்சேரி, காரைக்காலில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், […]

Continue Reading

சிவசேனா அதிருப்தி எம்எல்ஏகளுக்கு ஜூலை 11-ம் தேதி வரை அவகாசம்

சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். இதற்கிடையே, கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சிவசேனா சார்பில் துணை சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என கேட்டு துணை சபாநாயகர் 16 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார். திங்கட்கிழமைக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தார். சபாநாயகரின் […]

Continue Reading

சினிமா, டிவி நிகழ்ச்சியில் குழந்தைகள் நடிக்க தடை..!

மூன்று மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை நடிக்க வைக்க கூடாது என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘3 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை நடிக்க வைக்கக் கூடாது. மூன்று மாதத்திற்கு மேல் உள்ள குழந்தையை நடிக்க வைக்க மாவட்ட ஆட்சியரிடம் தயாரிப்பாளர்கள் அனுமதி பெற வேண்டும். குழந்தை நட்சத்திரங்கள் 6 மணி நேரத்துக்கும் மேலாகவும், இரவு 7 மணி முதல் காலை எட்டு மணி […]

Continue Reading