”தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தை பராமரிக்கவும்”

தாம்பரம் மாநகராட்சியின் நான்காவது மண்டல குழு கூட்டத்தில் தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள பஸ் நிலையத்தை சீரமைத்து முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. சென்னை புறநகர் தாம்பரம் மாநகராட்சி 70 வார்டுகளை கொண்டது. மொத்தம் ஐந்து மண்டலங்கள் உள்ள இம்மாநகராட்சியின் நான்காவது மண்டல குழு கூட்டம் இன்று பெருங்களத்துாரில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி மண்டல குழு தலைவர் காமராஜ் ஆணையாளர் இளங்கோவன் மற்றும் மண்டலத்திற்குட்பட்ட 14 […]

Continue Reading

சென்னை விமானநிலையத்தில் வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னையிலிருந்து துபாய், தாய்லாந்து நாடுகளுக்கு விமானங்களில் கடத்தமுயன்ற ரூ.50.71 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக சென்னை,திருச்சியை சோ்ந்த 5 பயணிகளை கைது செய்தனா். விசாரணையில் இது ஹவாலா பணம் என்று தெரியவந்தது. சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு பெருமளவு கணக்கில் இல்லாத ஹவாலா பணம் விமானம் கடத்தப் படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்க அதிகாரிகள் சென்னை சர்வதேச […]

Continue Reading

தமிழகத்தில் போக்குவரத்து காவலர்கள் கூடுதலாக நியமிக்கபடவேண்டும்: காவல் ஆணையர் ரவி பேட்டி

தாம்பரம் காவல் ஆணையரகத்திற்குட்பட்ட குரோம்பேட்டையில் முதன் முதலாக அமைக்கபட்டுள்ள் போக்குவரத்து எல் .இ.டி  சிக்னலை தாம்பரம் காவல் ஆணையர் ரவி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து வாகன ஓட்டிகளுக்கு இனிப்புடன் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் ரவி. கூறுகையில் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து பத்தாயிரம் காவலர்கள் உள்ளனர் ,இந்நிலையில் போக்குவரத்து காவலர்கள் பொறுத்த வரை பனிரெண்டாயிரம் பேர் மட்டுமே உள்ளனர் ஆதலால் போக்குவரத்து துறைக்கு நாற்பதாயிரம் காவலர்களும் […]

Continue Reading

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் : இறுதியில் பிரக்ஞானந்தா…!

16 வயதான ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, செஸ் போட்டிகளில் தனது அபார திறமையின் வழியாக உலகையே வியப்புக்குள்ளாக்கி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் Chessable Masters Tournament முதல் போட்டியில் உலகின் நம்பர் 1 சாம்பியனான மேக்னஸ் கார்ல்சென்னைத் தோற்கடித்தார். அதன் காலிறுதி போட்டியில் சீனாவின் வெய் யி-யை (Wei Yi) தோற்கடித்தார். இந்நிலையில் நேற்று அரையிறுதி போட்டி நடைபெற்ற நிலையில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியையும் தோற்கடித்தார் பிரக்ஞானந்தா இதில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி […]

Continue Reading

ஓமந்தூராரில் நிறுவப்பட்ட கலைஞர் சிலை

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை நிறுவப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 26-ந் தேதி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிவித்தார். அதன்படி ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் சிலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. சிலையை வடிவமைக்கும் பணிகள் மீஞ்சூரில் உள்ள சிற்பக்கூடத்தில் நடைபெற்றது. சிற்பி தீனதயாளன் இந்த சிலையை வடிவமைத்தார். முழுவதும் வெண்கலத்தினால் ஆன இந்த சிலை 2 டன் எடை கொண்டது. சென்னை அண்ணா […]

Continue Reading

பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு

1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார். எந்த மாநிலத்திலும் இல்லா வகையில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட நாள்காட்டி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இது தவிர வரும் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு தேதிகளையும் அமைச்சர் வெளியிட்டார். […]

Continue Reading

பிரபல பாடகி சங்கீதா உடல்நலக்குறைவால் மறைந்தார்

பிரபல திரைப்பட பாடகி சங்கீதா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 46. தமிழில் மிஸ்டர் ரோமியோ, தலைநகரம் என வெகு சில படங்களிலேயே பாடியுள்ள சங்கீதா சஜித் இதுவரை, 200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அவர் பாடிய கடைசி பாடல், பிருத்விராஜின் குருதி படத்தின் தீம் சாங் ஆகும். இதையடுத்து, கடந்த சில மாதங்களாக சிறுநீரகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, திருவனந்தபுரத்தில் உள்ள தன் சகோதரி வீட்டில் தங்கி அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார். இந்த […]

Continue Reading

மாணவர்களுக்கு முக்கிய செய்தி!

தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை இன்றுடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழைக்குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். இந்த திட்டத்தில் எல்.கே.ஜி. அல்லது 1-ம் வகுப்பில் இலவசமாக சேரும் மாணவர்கள், 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க […]

Continue Reading

சென்னையில் இன்று தக்காளி விலை

சென்னையில் நேற்று ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று கிலோவுக்கு 35 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே வரத்து குறைவு, தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் சென்னையில் காய்கறிகளின் விலையில் பெரிய ஏற்றம் காணப்பட்டது. குறிப்பாக தக்காளி விலை 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்து சென்னை மக்களை கண்ணீர் வெள்ளத்தில் ஆழ்த்தியது. விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பாக பசுமை விற்பனை நிலையங்கள் வாயிலாக தக்காளியை குறைந்த விலைக்கு விற்பனை […]

Continue Reading

விஸ்மயா வரதட்சணை கொடுமை 10 ஆண்டு சிறை

கேரளா வரதட்சணை கொடுமை வழக்கில் விஸ்மயா கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை கொல்லம் நீதிமன்றம் விதித்தது. கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த 22 வயது விஸ்மயா வி நாயர் என்ற பெண், தனது கணவர் கிரண்குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். விஸ்மயாவின் மரணம் வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்பட்டது. அவரது மரணம் சமூக ஊடகங்களில் விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. விஸ்வமயா ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை […]

Continue Reading