அதிமுகவிற்கு விக்ரவாண்டி, நாங்குநேரி சட்டசபை இடைதேர்தலில் முழு ஆதரவு : டாக்டர் தேவநாதன் யாதவ்

இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவரும் யாதவ மகா சபையின் தேசிய தலைவரு மான டாக்டர் தேவநாதன் யாதவ் அவர்களை, நேற்று தமிழக அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் அவர்கள் சென்னை,தி நகர், உள்ள தேவநாதன் இல்லத்தில் சந்தித்து நடைபெறவிருக்கும் விக்ரவாண்டி, நாங்குநேரி சட்டசபை இடை தேர்தலில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் மற்றும் யாதவ மகாசபையும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவளிக்குமாறு கோரினார்.

அதற்கு டாக்டர் தேவநாதன் யாதவ் அவர்கள் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றால் எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கைகளை அதிமுக அரசு நிறைவேற்றித் தரவேண்டும் என்று கூறினார். அதற்கு தளவாய் சுந்தரம் கோரிக்கைகள் பற்றி கூறுங்கள் முதல்வரிடம் எடுத்துச்சென்று அவற்றை நிறைவேற்றுவேன் என்று கூறினார். கோரிக்கைகள் குறித்து தேவநாதன் யாதவ் கூறுகையில்

1) யாதவ சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டயலில் சேர்க்க வேண்டும்

2) மாவீரன் அழகு முத்து கோனின் வீரத்தை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அவருடைய வரலாற்றை பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் 

3) TNPC -அமைப்பில் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு உறுப்பினர் பதவி வழங்க வேண்டும்

4) மதுரை யாதவர் கல்லூரி பிரச்சினையை சுமுகமாக தீர்த்து யாதவர் ஒருவரை தலைவராகநியமிக்க வேண்டும் 

5) ஆவின் நிறுவனத்தில் யாதவர்க்கு இயக்குனர் பொறுப்பு வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை தளவாய் சுந்தரம் அவர்களிடத்தில், டாக்டர் தேவநாதன் யாதவ் முன் வைத்தார்.

அப்போது டாக்டர் தேவநாதன் யாதவ் இல்லத்திலிருந்து படி முதலமைச்சர் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோரிக்கையின் விவரங்களை எடுத்துரைத்தார், கனிவுடன் கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட முதல்வர் உடனடியாக டாக்டர் தேவநாதன் அவர்களை அழைத்துக்கொண்டு தனது இல்லத்திற்கு வர சொன்னார்.

அதன் பெயரில் மாலை 6 மணி அளவில் டாக்டர் தேவநாதன் யாதவ் அவர்களுடன் முக்கிய நிர்வாகிகளும், டாக்டர் ஆவின் செல்வம், மற்றும் பிரதாப் குமார் ஆகியோர் சென்று முதல்வரை சந்தித்தனர். அப்போது தமிழக முதல்வர் யாதவ சமுதாயத்தில் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றித் தருவதாக டாக்டர் தேவநாதன் யாதவ் அவர்களிடம் வாக்குறுதி அளித்தார்,

முதல்வர் அவர்கள் தலைவர் தேவநாதன் யாதவ் அவர்களிடம் ஏறத்தாழ 45 நிமிடங்களுக்கு மேல் யாதவ சமுதாயத்தை பற்றியும் மேலும் சமுதாயத்துக்கு செய்யவேண்டிய செயல்கள் பற்றியும் பேசினார், முதல்வர் உடைய வாக்குறுதியை ஏற்று இடைத்தேர்தலில் யாதவர் சமுதாயம் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் அதிமுகவிற்கு ஆதரவளிப்போம் என தேவநாதன் யாதவ் முதலமைச்சர் இடத்திலே மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது துணைத் தலைவர் குணசீலன், சாலமன் மோகன்தாஸ், மாநில இளைஞரணி செயலாளர் நெல்லை சுந்தர் தேர்தல் பிரிவு செயலாளர் நந்தகுமார் டாக்டர் ஆவின் செல்வகுமார் மற்றும் பிரதாப் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்