தொண்டு நிறுவனம் வழங்கிய ஆம்புலன்ஸ் வாகனம் : ஏ.கே.விஸ்வநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

சென்னை, வளசரவாக்கத்தில் இயங்கி வரும் Believe Development Trust என்ற தொண்டு நிறுவனம் சமூகத்தில் ஏழ்மை நிலையில் உள்ள நபர்களுக்கு பல்வேறு உதவிகளையும், நலத்திட்டங் களையும் செய்து வருகிறது. Believe Development Trust – ன் நிறுவனர் எம்.ஆர்.அபிஜித், த/பெ.ரங்க ராஜன் (ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி) அவர்கள் தனது தொண்டு நிறுவனம் சார்பில் ஆம்புலன்ஸ் வாகனத்தை வாங்கி அதை சிவ கங்கையில் உள்ள ஆரோக்கியா சாரிடபிள் மருத்துவமனைக்கு இலவசமாக வழங்க முன்வந்தார்.

மேலும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களுக்கு புத்தாடைகளையும், ஏழை பெண் ஒருவருக்கு திருமண உதவி தொகையாக ரூ.2 லட்சத்தை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.

அதன்படி இன்று (23.08.2019) காலை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன், அவர்கள் கலந்து கொண்டு Believe Development Trust நன்கொடையாக வழங்கிய ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களுக்கு புத்தாடைகளையும் சிவகங்கையில் இயங்கி வரும் ஆரோக்கியா சாரிடபிள் மருத்துவமனை நிர்வாகி Sister.Poulina அவர்களிடம் Believe Development Trust ன் நிறுவனர் எம்.ஆர்.அபிஜித் அவர்கள் முன்னிலையில் வழங்கினார். இதனை தொடர்ந்து மேற்படி
டிரஸ்ட் வழங்கிய திருமண நிதி உதவி ரூ.2 லட்சத்தை, சென்னை ஐயப்பன்தாங்கலைச்சேர்ந்த இந்துஶ்ரீ என்ற ஏழை பெண்ணிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் ஆர்.தினகரன், இ.கா.ப., (வடக்கு), பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப, (தெற்கு) சி.ஈஸ்வரமூர்த்தி, இ.கா.ப (மத்தியகுற்றப் பிரிவு), காவல் இணை ஆணையாளர் ஏ.ஜி.பாபு, இ.கா.ப (தலைமையிடம்), துணை ஆணையாளர்கள் ஆர்.திருநாவுக்கரசு, இ.கா.ப, (நுண்ணறிவுப்பிரிவு) எம்.சுதாகர், (நுண்ணறிவு ப்பிரிவு), பி.சாமிநாதன், இ.கா.ப., (கட்டுப்பாட்டறை),எஸ்.ஆர்.செந்தில்குமார் (நிர்வாகம்), ராஜேந்திரன் (மத்திய குற்றப்பிரிவு), மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.