‘உஷார் பயன்பாட்டாளர்கள் மற்றும் சகலகலா பூச்சாண்டி’ இசை காணொளி : ஏ.கே.விஸ்வநாதன் வெளியீடு

இணைய பயன்பாட்டின்போது எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் விதமாக “உஷார் பயன்பாட்டாளர்கள் மற்றும்
சகலகலா பூச்சாண்டி” என்ற தலைப்பில் இசை காணொளி இன்று (16.8.2019 ) வெளியிடப்பட்டது.

ஏற்கனவே கடந்த 09.03.2019 அன்று சைபர் கிரைம் மற்றும் வங்கி மோசடி குறித்து தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு குறும்படத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வெளியிட, குறுந்தகட்டை திரைப்பட இயக்குநரும் நடிகருமான மனோபாலா அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “நல்லஇணைய பயன்பாட்டாளர்கள் நல்ல குடிமக்கள்” என்ற பெயரில், சென்னை பெருநகர காவல் துறையுடன் இணையது முருகப்பா குழுமம் தயாரித்துள்ள இசைக் காணொளியானது சமூக வலை தளத்தையும், இணையதளத்தையும் பொறுப்புடன் கையாள்வது எப்படி என்பது குறித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இசைக் காணொளியின் பாடலை சுப்பு எழுதி தயாரித்திட, மேட்லி ப்ளூஸ் இசையமைக்க, நாட்டுப்புறப் பாடகர்களான அயதோணிதாசன் மற்றும்  திருமதி. சின்னபொண்ணு ஆகியோர் பாடியுள்ளனர்.

தற்போது பொதுமக்கள் சந்திக்கும் பெருமளவிலான இணையவழிக் குற்றங்களுக்கு காரணமாக விளங்கும் மூன்று முக்கியமான அம்சங்கள் இந்த காணொலியில் இடம் பெற்றுள்ளன.

• தனிநபர் விபரங்கள் மற்றும் முக்கியமான தகவல்கள் / புகைப்படங்களை பகிர்வதனால் இளம் பெண்கள் மற்றும் பெண்கள் சயதிக்கும் அபாயங்கள் குறித்து அறியமுடியும்.

• பொதுமக்கள் தங்களது நிதி சம்பயதப்பட்ட தகவல்கள் / கடவுச் சொற்கள் / கடவு எண்கள் போன்றவற்றை ஒருபோதும் யாருடனும் பகிரக்கூடாது என்பதை அறியதுகொள்ள இயலும்.

• இணையவழி மூலமாக வதயதிகளை பரப்புதல் / வெறுப்பினை தூண்டுதல் போன்ற செயல்களில் ஈடுவதனால் ஏற்படும் சட்டரீதியான விளைவுகளை பொதுமக்கள் அறியது கொள்ள இயலும்.

இந்த விழிப்புணர்வு குறுந்தகடு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.க.விசுவநாதன்,மற்றும் எம்.எம்.முருகப்பன், தலைவர், முருகப்பா குழுமம், ஆகியோரால் இன்று (16.08.2019) வெளியிடப்பட்டது.