ஆந்திர முதல்வருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் மீள்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் ஆகியோர், இன்று ஆந்திர மாநில தலைநகரான விஜயவாடாவில் அம்மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் ரெட்டியை நேரில் சந்தித்தனர்.

அப்போது சென்னைக்கு குடிநீர் தேவைக்காக, கண்டலேறு நீர் தேக்கத்திலிருந்து போதுமான தண்ணீரை உடனடியாக விடுவிக்கக் கோரிய தமிழக முதல்வர் அவர்களின் கடிதத்தை வழங்கினார்கள். நமது கோரிக்கையை ஏற்று ஆந்திர பிரதேச முதல்வர் அவர்கள், சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக, போதுமான தண்ணீரை உடனடியாக விடுவிக்க உறுதி அளித்துள்ளார்.