பேனர் விவகாரம் அறிவுரை வழங்க நீதிமன்றம் உத்தரவு

பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கப்படுவது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தொடர்ந்திருந்த வழக்கில், நீதிபதிகள் கூறுகையில்,பொதுவாக சட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. மேலும், அரசியல் கட்சி தலைவர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகத்தான் தொண்டர்கள் பேனர்களை வைக்கின்றனர்.

எனவே, தொண்டர்களுக்கு தலைவர்கள் அறிவுரை வழங்க வேண்டும். அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக பேனர்களை வைக்காதீர்கள் என்று தங்களது கட்சித் தொண்டர்களை, தலைவர்கள் அறிவுறுத்த வேண்டும்.

இந்த சட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் கோரிக்கை விடுத்தார். அவருக்கு கால அவகாசம் வழங்குகிறோம். இது அரசுக்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பு ஆகும் என்றும் எச்சரித்துள்ளனர்.