காஷ்மீர் விவகாரம் அமித்ஷாவின் அதிரடி பேச்சு

காஷ்மீர் விவகாரம் குறித்து மக்களவையில் அமித்ஷா பேசுகையில், பாகிஸ்தான் மற்றும் சீன ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க என் உயிரையும் கொடுக்க தயார். ஜம்மு காஷ்மீருக்காக சட்டம் இயற்றும் உரிமை நாடாளுமன்றத்துக்கு உள்ளது. அரசியல் காரணங்களுக்காக ஜம்மு- காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவில்லை

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை மறந்து விடாதீர்கள். இந்த விவகாரத்தில் ஐநா தலையிட காங்கிரஸ் விரும்புகிறதா? காஷ்மீர் தொடர்புடைய சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளது. காஷ்மீர் தொடர்புடைய விவகாரங்களில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு யாருக்காவும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசுக்கு உள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான காஷ்மீர் பகுதிகளையும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது என்று தெரிவித்தார்.