தாயின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த மகள்கள் – மகிழ்ச்சியில் இருக்கும் நடிகை யார் ?

உலக அழகி பட்டம், மேலும் இந்திய திரையுலகில் இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ள பிரபல நடிகையான சுஷ்மிதா சென் வருகின்ற நவம்பர் மாதம் தனது காதலனை கரம் பிடிக்க உள்ளார். இதற்கு சுஷ்மிதா சென் மகள்கள் இருவரும் சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுஷ்மிதாவுக்கு 43 வயதாகும் நிலையில், அவரது காதலால் ரோமனுக்கு வயது 24 ஆகும் தன்னைவிட 19 வயது குறைத்த நபவரை சுஷ்மிதா சென் திருமணம் செய்ய உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுஷ்மிதாவும், ரோமனும் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியானது. அதில் சுஷ்மிதா கையில் இருந்த மோதிரத்தை பார்த்து, இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது என செய்தி பரவியது