கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு

சென்னையில் மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை (14.2 கிலோ) 62 ரூபாய் குறைந்துள்ளது.சென்னையில் கடந்த மாதம் ரூ.652.50-க்கு விற்கப்பட்ட சிலிண்டர் இப்போது ரூ.590.50-தாக குறைந்துள்ளது. டெல்லியில் ரூ.574.50-க்கும் மும்பையில் ரூ.546.50-க்கும் சிலிண்டர் விலை குறைந்துள்ளது.

ஒவ்வொரு முறையும் சிலிண்டரின் விலை விபரம் மானியம் பற்றி இணைய தளத்தில் வெளியிடப்படும். ஆனால் இந்தமுறை விலை விபரம், மானியம் குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.