ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்

ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று காலை முதலே ராமேசுவரத்தில் பக்தர்கள் குவியத் தொடங்கினர். நேரம் செல்ல செல்ல பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது.அக்னி தீர்த்த கடலில் நீராடிய அவர்கள் கடற்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் ராமநாத சுவாமி கோவிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி ராமநாத சுவாமி – பர்வத வர்த்தினி அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட வரிசையில் காத்து நின்று தரிசித்தனர்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு பர்வதவர்த்தினி அம்மன் தங்க கருட வாகனத்தில் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.பக்தர்களின் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் ராமேசுவரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையில பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.