தென்மேற்கு பருவ மழை மூலம் கிடைக்கும் சராசரி மழையின் அளவு இந்த ஆண்டும் குறைவு : சென்னை வானிலை மையம்

சென்னை வானிலை மைய அதிகாரி கூறுகையில், வட மாவட்டங்களில் வெப்பச்சலனம் உருவாகி வருவதால் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணா மலை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, சேலம், தர்மபுரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 12 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யும். புதுச்சேரி, காரைக்காலிலும் மழையை எதிர்பார்க்கலாம்.

சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பருவ மழை மூலம் கிடைக்கும் சராசரி மழையின் அளவு இந்த ஆண்டும் குறைந்துள்ளது. எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.