முறையான சின்னம் கிடைத்த பிறகு தேர்தல்களில் போட்டி : தினகரன் பேச்சு

வேலூர் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 அன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தநிலையில், முன்பு அறிவித்தபடி, புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என அதிமுக அறிவித்துள்ளது. திமுக வேட்பாளராக மீண்டும் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.

இந்த சூழலில் வேலூர் தொகுதியில் அமமுக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அமமுக சீர்குலைந்துவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். இப்போதுதான் கட்சியைப் பதிவுசெய்யும் பணியில் உள்ளோம். இந்தப் பணி முடிவடையவில்லை. இன்னும் சில இடைத்தேர்தல்கள் வர உள்ளன. அதனால் தனித்தனி சின்னங்களில் சுயேச்சையாக நிற்க வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகள் கலந்து பேசி முடிவெடுத்துள்ளோம்.

அமமுகவைப் பதிவு செய்து, முறையான சின்னம் கிடைத்த பிறகு தேர்தல்களில் போட்டியிட முடிவுசெய்துள்ளோம். இதனால் வேலூர் தேர்தலில் போட்டியிடவில்லை” என்றார் தினகரன்.