காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து ஷிகர் தவான் விலகல்

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் விளையாடி வந்த ஷிகர் தவான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது தவானின் பெருவிரலில் ஹேர்லைன் அளவிற்கு எழும்பு முறிவு ஏற்பட்டது. இந்தக் காயம் குணமடைய மூன்று வாரங்கள் ஆகும் என இந்திய அணியின் டாக்டர் குழு மதிப்பிட்டிருந்தனர். மூன்று வாரம் என்பதால் ஜூலை 1-ந்தேதிக்குள் உடற்தகுதி பெற்று விடுவார். அதுவரை லோகேஷ் ராகுலை தொடக்க வீரராக களம் இறக்கிக் கொள்ளலாம் என நிர்வாகம் முடிவு செய்தது.

இதுகுறித்து பிசிசிஐ ‘‘தவான் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ரிஷப் பந்தை அணியில் சேர்க்க அனுமதியளிக்க வேண்டும்’’ என்று ஐசிசிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனால் தவானில் 2019 உலகக்கோப்பை கனவு இரண்டு போட்டிகளுடன் முடிவுக்கு வந்துள்ளது.