பிரபாகரன் படம் நீக்கப்படுவது குறித்து ஃபேஸ்புக் விளக்கம்

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்களை முகநூலில் பதிவிடும் போது அந்த படம் நீக்க படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், இது குறித்து முகநூல் அதிகாரி ஒருவர் கூறுகையில், விடுதலை புலிகள் இயக்கம் என்பது தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கம். ஃபேஸ்புக் விதிமுறைகளுக்கு ஏற்புடையதாக இல்லாததால் பிரபாகரன் படத்தினை எடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையை அடுத்து தமிழகத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பிரபாகரனின் படத்தை தங்களது ஃபேஸ்புக்கில் பதிவிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக பலரும் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.