கொழும்பில் மீண்டும் வெடி சத்தம் மக்கள் பீதி

கொழும்பு புறநகரான புகோடா நகரில் உள்ள நீதிமன்றத்திற்கு பின்பகுதியில் உள்ள காலி நிலத்தில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அங்குள்ள குப்பை பகுதியில் கிடந்த வெடிகுண்டு வெடித்திருக்கலம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்தனர். அப்பகுதிக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை நடத்தி வருகின்றனர்.