பயப்பிடும் போது நாம் ஏன் நெஞ்சை பிடித்து கொள்கிறோம்?

நம்மை யாரேனும் பயமுடுதினாலோ, அல்லது திடுக்கிட்டு பயந்தாலோ நாம் முதலில் செய்வது நெஞ்சில் கைய வச்சுப்போம், பிடிசுபோம் இதற்கு காரணம் என்னவா இருக்கும்.

இறைவனுக்கு 5 சொரூபம் அதில் ஒன்று “அந்தர்யாமி” அதாவது நம் உள்ளதில் குடிகொண்டு இருக்கும் இறைவன் என்று பொருள் அந்த இறைவனுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்று பயந்து நம்மை அறியாமலே நெஞ்சை பிடிசுபோமாம் இதை பிரகலாதன் வாயிலாவே கேட்டு அனுபவிப்போம்

பிரகலாதன் இரண்யகசிபின் மகன் பிஞ்சு பையனா இருக்கும் போதே ஆயிரம் நாமம் சொல்வானாம், ஒரு நாமம் சொன்னாலே இரண்ய கசிபுக்கு பிடிக்காது இதில் ஆயிரம் சொன்னா சும்மா விடுவானா மகன் என்று கூட பார்க்காமல் கொலை செய்ய உத்தரவிடுகிறான், அடிச்சான் உதைதான் விஷம் வச்சான், சாகவே இல்லை குழந்தை கடைசியில் மலையில் இருந்து உருட்டிவிட்டானாம் இது வரை பயப்படாத குழந்தை முதல் தரம் பயபட்டதாம், இரண்யகசிபுக்கு குழந்தை உயிருடன் இருக்கிறதே என்று ஆச்சரியம் இல்லை, முதல் முறை பயபட்டுடானே என்று ஆச்சரியமாம் கேட்டான் குழந்தையுடன் ஏன் நெஞ்ச புடிசுகிட்ட, பயன்துடியான்னு அதற்கு பிஞ்சு குழந்தை சொல்லுச்சாம் எனக்கு எதுவும் ஆகிடுமோன்னு பயம் இல்லை என் உள்ளதில் உள்ள அந்தர்யாமியான நாராயணனுக்கு ஏதும் ஆகிடுமோனு பயந்துட்டேன்னு சொன்னானான் அந்த பிஞ்சு பையன் பிரக்லாதன் இப்ப புரியுதா நாம் ஏன் நெஞ்ச புடிசுகிரேம்ன்னு