கோவை வ.உ.சி பூங்காவில் மாற்று திறனாளி குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு வசதிகளை செய்துள்ளது ஹைக்கூ நிறுவனம்

கோவையில் மாற்றுத் திறனாளி குழந்தைகளும் பூங்காக்களில் இனி அனைத்து விளையாட்டுகளையும் விளையாடலாம் ஹைக்கூ என்ற அமைப்பின் சார்பில், பூங்காக்களில் மாற்றுத் திறனாளி குழந்தைகளும் எந்த வித இடையூறும் இல்லாமல் விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில், கோவையில் உள்ள பூங்காக்களில், அவர்கள் விளையாடுவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த உள்ளதற்கான துவக்க விழா கோவையில் நடைபெற்றது.

பூங்காக்களில் உள்ள விளையாட்டு உபகரணங்களை கொண்டு , மாற்றுத் திறனாளி குழந்தைகள் விளையாட முடியாத சூழல் இருந்து வருகிறது. எனவே அவர்களும் மற்ற குழந்தைகளை போல, அனைத்து விளையாட்டுகளையும் விளையாடும் நோக்கத்தில் கோவையை சேர்ந்த,ஹைக்கூ என்ற அமைப்பு பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கோவை மாவட்டத்தில் உள்ள வ.உ.சிபூங்காக்களில்  சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகளை ஏற்படுத்த உள்ளனர். இதற்கான அறிமுக விழா கோவையில் உள்ள வ. உ. சி பூங்காவில் நடைபெற்றது. சிறப்பு குழந்தைகள் பிரத்யேகமாக விளையாடும் உபகரணங்களை வைக்க உள்ளனர். குறிப்பாக பூங்காக்களில் ம் நுழைவு வாயிலில் இருந்து அவர்களுக்கான சாய்வு மேடை , மற்றும் சக குழந்தைகளை போல அவர்களுக்கான விளையாட்டு பொருட்கள் இந்த பூங்காவில் இருக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இது குறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங்காக்களிலும் இந்த வசதியை ஏற்படுத்த உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.