கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் திமுகவினர் தெருமுனை பிரச்சாரம்

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதி கழகம் மற்றும் இளைஞர் அணி சார்பாக திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் 95வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு துடியலூர் பகுதியில் முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர் CR ராமச்சந்திரன் தலைமையில் தெருமுனைப் வாகன பிரச்சாரம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பகுதி கழக பொருப்பாளர் k ஜோதிபாசு கலைஞர் கருணாநிதி அவர்களின் 95வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெறுகிறதுஇப்பிரச்சாரத்தில் அதிமுக அரசின் மக்கள் துரோக செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துசொல்வது இந்த தெருமுனை பிரச்சாரத்தின் நோக்கம் என்றும் ,மேலும்  கோவை மாநகராட்சி குடிநீர் வழங்கும் திட்டத்தை வெளிநாட்டு கம்பெனியான சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. அந்த ஒப்பந்தத்தை கண்டித்து சிங்காநல்லூர்சட்டமன்ற உறுப்பினரும் மாநகர் மாவட்ட செயளாருமான நா.கார்த்திக் தலைமையில் வரும் 6 ம் தேதி செஞ்சிலுவை சங்கம் முன்பு போராட்டம் நடை பெற உள்ளது அதில் கோவை மாவட்டத்திருந்து அனைத்து பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக செயளாலர்கள்,மற்றும் அனைத்து திமுக தொண்டர்களும் திரளாக கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருப்பது பற்றிய கேள்விக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்காத நிலையில் மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது. அவர்களின் இழப்பை சரி கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதைப் போக்குவதற்காக உள்ளாட்சித் தேர்தல் உடனே நடைபெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாவிட்டால் திமுக கட்சி   மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தும் என கூறினார்.